பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? செங்கோட்டையன் பதில் என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பொது முடக்கம் முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

 

ஆசிரியர்கள் கொரொனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் கொரொனா வைரசின் தாக்கம் முற்றிலும் குறைந்த பிறகு குழு அமைத்து ஆய்வு செய்த பின் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கொரொனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் ஊரடங்கு வரும் 3 ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.


Leave a Reply