சூர்யா, ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்து சிறப்பு என ட்வீட் செய்த நடிகர் விஜய் சேதுபதி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஜோதிகா தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என விளக்கம் அளித்து இருக்கும் நடிகர் சூர்யாவின் நிலைபாட்டிற்கு நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்துள்ளார். கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்ற ஜோதிகா நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

 

இது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி சிறப்பு எனக் குறிப்பிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

சூர்யா, ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை ஓ‌டி‌டி தளத்தில் வெளியிடுவதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா போன்றோர் நடிக்கும் திரைப்படங்களை இனிவரும் காலங்களில் திரையரங்குகளில் வெளியிட போவதில்லை என தெரிவித்தனர். இந்தநிலையில் பொன்மகள்வந்தாள் படக்குழுவினருக்கு கலைப்புலி தாணு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


Leave a Reply