--- --:--:-- --

பெண்களுக்கு பிரச்சனையா? இனி ஒரு போன் கால் போதும்..!

7

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் 1 8 1 1 0 9 1 1 2 2 போன்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

 

ஊரடங்கின் போது குடும்பச் சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக 1 8 1 பெண்கள் உதவி மையம், 1 0 9 1 காவல் துறை பெண்கள் உதவி மையம், 1 2 2 பெண்கள் உதவி எண், தகவல் தெரிவித்தால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு, போன்ற அத்தியாவசிய தேவை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon