மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக பலி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பீகாரில் மின்னல் தாக்கி 3 மாவட்டங்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . கோடை மழையின் ஒரு பகுதியாக இடி மின்னலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பீகாரின் சரண் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், ஜமோய் மாவட்டத்தை சேர்ந்த 20 பேரும், போஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 

இவர்கள் வயல் வேலை உள்ளிட்டவற்றுக்கு வெளியில் சென்ற போது மின்னல் தாக்கியதில் கூறப்படுகிறது. மின்னல் தாக்கியவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதால் பாதிப்பு குறைந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply