டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு : பாடத்திட்டத்தில் எந்த தலைப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பாடத்திட்டத்தில் எந்த தலைப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதை இப்போது பார்ப்போம்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 8 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்தக் குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கான அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2026 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு இல்லை.
இந்த குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தின் படி எந்த தலைப்பில் இருந்து எவ்வளவு கேள்விகள் இடம்பெறும் என்பதைத் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
பொதுத் தமிழ்
இலக்கணம் – 25 கேள்விகள்
சொல்லகராதி – 15 கேள்விகள்
எழுதும் திறன் – 15 கேள்விகள்
கலைச்சொற்கள் – 10 கேள்விகள்
வாசித்தல் – புரிந்துக் கொள்ளும் திறன் – 15 கேள்விகள்
எளிய மொழிப்பெயர்ப்பு – 5 கேள்விகள்
இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் – 15 கேள்விகள்
இலக்கணம் மற்றும் அது சார்ந்த பகுதிகளில் இருந்தே கிட்டத்தட்ட 85 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இலக்கியம் சார்ந்து 15 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், இலக்கணப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். மேலும் பாடப்புத்தகளில் இருப்பதை அப்படியே படிப்பதை விட புரிந்துக் கொண்டு படித்தால் இந்த 85 வினாக்களில் 75 வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொது அறிவு
அறிவியல் – 5 கேள்விகள்
புவியியல் – 5 கேள்விகள்
இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் – 10 கேள்விகள்
இந்திய ஆட்சியியல் (அரசியலமைப்பு) – 15 கேள்விகள்
இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் – 20 கேள்விகள்
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் – 20 கேள்விகள்
அறிவியல், புவியியல் தவிர மற்ற 4 தலைப்புகளில் இருந்து 65 கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு சார்ந்து கிட்டத்தட்ட 40 கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே இந்த தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
திறனறிவு – மனக்கணக்கு நுண்ணறிவு
திறனறிவு – 15 கேள்விகள்
காரணவியல் – 10 கேள்விகள்
தினமும் பயிற்சி செய்தால் இந்த 25 கேள்விகளில் 22-23 கேள்விகளுக்கு நிச்சயம் சரியாக விடையளிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





