--- --:--:-- --

பெண் ஐஏஎஸ் அதிகாரி கூடுதல் பொறுப்பு விடுப்பு!

5

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் சர்ச்சை எதிரொலியாக, பொது நூலகத்துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பில் இருந்து ஜெயந்தி ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவை பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் மற்றும் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது.

 

 

 

தவெக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். நூலகத்தின் நான்காவது தளத்தில் தமிழ் நூல்களுக்கு என தனி பிரிவு உள்ளது. இங்கு அகல் விளக்கு என்ற பதிப்பகத்தின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை கேள்விப்பட்டிராத அந்த பதிப்பகத்தின் பெயரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதனால் அதில் இருக்கும் எழுத்தாளர்களின் பெயர்கள் போலியானவை என்ற சந்தேகமும் வாசகர்கள் இடையே எழுந்துள்ளது.

 

 

இந்த விவகாரத்தின் எதிரொலியாக, பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஜெயந்தி ஐஏஎஸ்ஸிடம் இருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி ஐஏஎஸ், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் நிலையில், கூடுதலாக பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

 

இந்நிலையில், அவரிடம் இருந்து பொது நூலகத்துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், புதிய பொது நூலக இயக்குநராக ஆர்.வி. ஷாஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்தி ஐஏஎஸ், TRB தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள சூழலில், பொது நூலகத்துறை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம் கவனம் பெற்றுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon