பழிவாங்கலை விட்டு தமிழக மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும்: த.வெ.க அரசுக்கு ஓ.பி.எஸ் அறிவுறுத்தல்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில், தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, தமிழக மக்களையும் காவல்துறையினரையும் பாதுகாக்கும் முதன்மை நடவடிக்கைகளில் த.வெ.க அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




