காரைக்குடியில் ரவுடி படுகொலை: வன்முறையைத் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரபல ரவுடி நவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், மோதல்கள் மேற்கொண்டு பரவாமல் இருக்கவும் படுகொலை செய்யப்பட்ட ரவுடி நவீனின் வீடு மற்றும் இக்குற்றத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளுக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




