சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்..! எத்தனை நாட்கள் தெரியுமா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் வரை தமிழக அரசு அவகாசம் அளித்து இருக்கிறது.

 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், தியேட்டர்கள், சந்தைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

 

பொருளாதார தேக்கத்தில் இருக்கும் மக்களின் சிரமத்தை குறைக்க ஏற்கனவே மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. இந் நிலையில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்பதை ஜூன் 30 என மாற்றப்பட்டு, அரசாணை வெளியிட்டுள்ளது. 3 மாத அவகாசத்திற்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


Leave a Reply