டெல்லியில் கொரொனாவால் பெண் புலி உயிரிழப்பா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லி உயிரியல் பூங்காவில் சிறுநீரகம் பாதிக்கப் பட்ட பெண் புலி உயிரிழந்தது. அங்கு வளர்க்கப்பட்டு வந்த 14 வயது மதிக்கத்தக்க கல்பனா என்ற பெண் புலிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பூங்கா அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் புலி உயிரிழந்தது. இதையடுத்து புலியின் மாதிரிகளை எடுத்து உத்திரப்பிரதேச மாநிலம் அருகில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

கொரொனா இருந்ததா என்று ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த புலிக்கு ஏற்கனவே சிறுநீரகத்தில் பாதிப்பு எழுந்ததும் அதன் காரணமாக உயிரிழந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு ஓரளவு பண வசதி உள்ளவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில், மக்கள் நெருக்கம் அதிகமான பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என அந்த துறையை சார்ந்தவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

பொருளாதார நிலை சீரடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனக் கூறப்படும் நிலையில் பலர் கையில் இருக்கும் பணத்தை வைத்து புதிய கார்களை வாங்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. கால் டாக்சிகளின் சுகாதாரம் குறித்த நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகும் என்பதால் பலர் பயன்படுத்தப்பட்ட கார்கள் தேடி வரும் நிலைமை ஏற்படும் என மாருதி சுசுகி, ஹூண்டாய், மகேந்திரா நிறுவனங்களின் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர்.


Leave a Reply