--- --:--:-- --

மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழை!

7

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை கரு மேகங்கள் சூழ மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கோரிபாளையம் ,திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோயில் மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon