கொரோனா நமக்கு இந்த பாடத்தை கற்றுத் தந்துள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தனித்து தன்னம்பிக்கையுடன் இருந்த சவால்களை சந்திக்க வேண்டும் என்ற பாடத்தை கொரொனா கற்று தந்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார்.

 

அப்போது பெருந்தொற்று நோயான கொரொனா நமக்கு பல சவால்களை ஏற்படுத்தி வருவதாக கூறிய மோடி சவால்கள் ஏற்படும் போது தனித்திருந்து அவற்றை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதை கொரொனா கற்று தந்து இருப்பதாக கூறினார்.

 

கிராமப்புறங்களில் மக்கள்தனிமனித இடைவெளியை பின்பற்றி மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதாகக் கூறிய மோடி, சில தடங்கல்கள் இடையூறுகள் இருந்த போதிலும் கொரொனாவை எதிர்த்துப் போராடி நம்மால் வெற்றிபெற முடியும் என்ற உறுதியை நாம் உலகுக்கு காட்டி இருப்பதாக தெரிவித்தார்.

 

கிராம பஞ்சாயத்துகளை மின்னநுமயமாக்கும் நோக்கத்தில் கிராம சுவராஜ் இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வளர்ச்சி திட்ட பணிகள் போன்றவை தெரிந்து கொள்ளலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply