--- --:--:-- --

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்..!

14

டிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவில் சிறந்த நடிகராக போற்றப்படும் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலாம்பாள் தம்பதிக்கு 4 குழந்தைகள். ராம்குமார், பிரபு என்ற 2 மகன்கள். சாந்தி, தேன்மொழி என 2 மகள்கள். 4 பேரில் மூத்தவர் சாந்தி. இவர் தான் அந்த வீட்டின் முதல் பெண் குழந்தை.

 

 

தனது மகள் மீது கொண்ட பாசத்தினால், நடிகர் திலகம் சிவாஜி, சென்னை அண்ணா சாலையில் சிவாஜி திறந்த தியேட்டருக்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார். சாந்தியின் திருமணமும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், பாலிவுட் ஹீரோக்கள், பாடகி லதா மங்கேஷ்கர் என பலரும் கலந்து கொண்டனர். திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

 

 

சிவாஜியின் பூர்வீக வீட்டில் சாந்தி, தேன்மொழி குடும்பத்தினர் வசித்து வந்தனர். வீடு தொடர்பாக சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சாந்தி நாராயணசாமி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon