கோவையில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !!

Publish by: கோவை - விஜயகுமார் --- Photo : Arrangement


கோவை மாவட்டம் முழுவதும் 3000 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு கொரொனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

 

இதில் 537 பேருக்கு தற்போது பரிசோதனை முடிவுகள் வரப்பட்டுள்ளது. அதில் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பெண் காவலருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இந்நிலையில் கோவை போத்தனூரில் நேற்று பரிசோதனை செய்யப்பட்ட இரண்டு பெண் காவலர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஏற்கனவே, 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 7 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் பெண் காவலர்கள் பணிபுரிந்த போத்தனூர் காவல் நிலையம் முழுவதும் மூடி ” சீல் ” வைக்கப்பட்டுள்ளது. மூன்று காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

கடந்த சில தினங்களாக கோவையில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மூன்று காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மற்ற காவலர்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது.

 


Leave a Reply