இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி முகநூல் வாயிலாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மு.தமிழ்முருகன் தலைமையில் அனைத்து தாலூகாவிலும் முகநூல் வாயிலாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இது குறித்து மாவட்ட செயலாளர் கூறியதாவது:

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறை, அச்சு ஊடகம் காட்சி ஊடக தோழர்கள் ஆகியோரது பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.

மேலும் குடும்ப அட்டை, மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 வழங்கிட அரசு பரிசீலனை செய்திட வேண்டும். மற்றும் பதிவுசெய்த, பதிவு்செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணமாக ரூ10,000, வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளிட்ட வலியுறுத்திய பதாகைகளை ஏந்தி நடைப்பெற்றது.இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள், துணைநிலை அமைப்புகளின் நிர்வாகிகள், அவரவர் இல்லத்தில் இருந்தவாறு முகநூல் வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று கூறினார்.


Leave a Reply