மருத்துவர்கள் இருந்த இடத்தின் மோசமான நிலை குறித்து வீடியோ

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உத்திரபிரதேசத்தின் சுய தனிமைக்கு பயன்படுத்தப்பட்ட அரசு பள்ளியில் மின்விசிறிகளும், கழிவறைகளும் மோசமாக இருப்பதாகவும் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட மருத்துவர்கள் விருந்தினர் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். ரேபரேலி மாவட்டத்தில் கொரொனா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அரசுப் பள்ளி ஒன்றில் சுய தனிமையில் இருந்தனர்.

 

அந்த பகுதியில் விவசாயிகள் இயங்காமல் இருந்தது. கழிவறைகளும் மோசமான நிலையில் இருந்துள்ளன. அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளும் தரமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மூன்று வீடியோக்களை தனித்தனியாக எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி அங்கு ஆய்வு நடத்தி அவர்களை விருந்தினர் இடத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.


Leave a Reply