கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த மேலும் 19 பேர் ” டிஸ்சார்ஜ் ‘. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட கலெக்டர் ராசாமணி உள்ளிட்டோர் பழங்களை வழங்கி,கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் !!!
கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வந்தது.இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை141 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 93 பேர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த மேலும் 19 பேர் முழுமையாக குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குணமடைந்தவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட கலெக்டர் ராசாமணி உள்ளிட்டோர் பழங்களை கொடுத்தும்,கைகளை தட்டியும் உற்சாகமாக அனுப்பி வைத்தனர்.கோவை மாவட்டத்தில் இதுவரை 112 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று வரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 112 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

இந்நிகழ்வில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட கலெக்டர் ராசாமணி,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன்,ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துமனை முதல்வர் நிர்மலா,மருத்துவ கண்காணிப்புக்குழு அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தூய்மை பணியாளர்கள்,அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களை கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.






