செல்போன் பறித்து சென்ற இளைஞர்! போலீஸ் போட்ட மாவுக்கட்டு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை நீலாங்கரை அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்ததாக 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு காவல் நிலையத்தில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. ஈஞ்சம்பாக்கத்தில் 19ஆம் தேதி காலையில் சாலையில் செல்போன் பேசிக்கொண்டேசென்ற பெருமாள் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போன் பறித்து சென்றனர்.

 

இதுகுறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உதயசங்கரை மடக்கி பிடித்த போலீசார் தலைமறைவான அபிமன்யுவை தேடி வருகின்றனர். கைதான உதய சங்கர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களில் ஒருவன் இவன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Leave a Reply