ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். பாரசீக வளைகுடா கடல் பகுதியில் கடந்த 15ஆம் தேதியிலிருந்து பட ஈடுபட்டுக்கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றிவளைத்தனர்.

 

கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகளை சுற்றி வளைத்து வட்டமிட்டது. இந்நிலையில் அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈழநாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

பின்லாந்தில் கொரொனா பரவலை தடுக்க பல்பொருள் அங்காடியில் விரல்களுக்கு பதிலாக முன் கையால் கதவுகளைத் திறக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள அலமாரிகள் வரவேற்பை பெற்றுள்ளன. அந்நாட்டில் கொரொனா தொற்றால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை தடுக்க அரசும் பொதுமக்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 

அந்த வகையில் ஹெல்சிங்கி நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வைக்கப்படும் அறைகளின் கதவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் கைவிரல்களால் கதவை திறக்காமல் முன்னங்கைகளை பயன்படுத்தி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply