விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! தம்பிக்குப் பதிலாக அண்ணன் படுகொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


144 தடை உத்தரவை மீறி அந்த பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை தட்டிக் கேட்டவரின் சகோதரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, சாலைகளில் நடமாடக் கூடாது, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் அரசு சொல்லி வரும் நிலையில் சிலர் அதை மதிப்பதாக தெரியவில்லை.

 

தமிழகத்தின் பல இடங்களில் போலீசார் டிரோன் மூலம் விதியை மீறி சுற்றித் திரிபவர்களை விரட்டி வருகின்றனர். ஆனால் சென்னையில் விதி மீறலை தட்டிக் கேட்பதில் கொலை நடந்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் பெரியார் நகர் சாலையில் சில சிறுவர்கள் கட்டுப்பாட்டை மீறி விளையாடிக்கொண்டிருந்தனர். பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் லட்சுமணன் சாலையில் விளையாடியவர்களிடம் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த சித்தார்த் என்ற இளைஞருக்கும் லட்சுமணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வீடு திரும்பிய சித்தார்த் தனது சகோதரர் சிவா மற்றும் அவருடைய நண்பர் ஜானியிடம் நடந்தது குறித்து தெரிவித்துள்ளார். இருவரும் நேராக லக்ஷ்மணனிடம் சென்று மிரட்டியுள்ளனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

கீழே இருந்த பாட்டிலை எடுத்து உடைத்த ஜானி சிவாவை லக்ஷ்மணன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து செவ்வாய் இரவு லக்ஷ்மணனை தேடி அவரது வீட்டிற்கு சிவா ஜானி உள்ளிட்ட 10 பேர் சென்றுள்ளனர். லட்சுமணன் வீட்டிற்கு கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து லக்ஷ்மணனின் அண்ணன் மெக்கானிக் பிரபாகரனை வெட்டிக் கொலை செய்தனர்.

 

இதை தடுக்க வந்த கிருபாகரன் உறவினர் ஆனந்தன் என்பவரை காலை வெட்டிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பிரபாகரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஆனந்தனை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

தலைமறைவாக உள்ள சிவா உள்ளிட்ட 10 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சின்ன விதிமீறல், குழு மோதல், ஆயுத மோதல், கொலை என சின்ன விஷயம் இப்படி விஸ்வரூபம் எடுத்ததை இந்த இளைஞர்களின் பெற்றோர்கள் அறிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை ஊரடங்கு காலத்தில் கவனிக்காமல் பெற்றோர்களுக்கு அப்படி என்ன வேலை என்று அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Leave a Reply