மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஒருவர் வீடுகளுக்கு நேரில் சென்று மருத்துவம் பார்த்து வருகிறார். பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்ராஜன் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.

 

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு வரமுடியாத சூழல் இருப்பதால் அவர்களது வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார். நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதோடு மருத்துவ ஆலோசனைகளையும் அளிக்கிறார் மருத்துவர்.


Leave a Reply