கொரோனாவால் 40 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் தொழிலாளர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனா வைரஸ் தாக்கம் இரண்டாம் உலகப் போரை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 19 கோடியே 50 லட்சம் பேரின் முழுநேர வேலை பறிபோகும் வாய்ப்பிருப்பதாகவும், தொழிலாளர்கள் நிறுவனங்களும் இதுவரை இல்லாத பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் அமைப்பு சாராத தொழில்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் உள்ள நிலையில் கொரொனாவால் தொழில்கள் முடங்கி இருப்பதால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என அமைப்பு கூறியுள்ளது.

 

இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் வறுமையில் விழும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விரைவான உறுதியான ஒருங்கிணைந்த வகையில் சரியான அவசர முடிவுகளை எடுத்தால் மட்டுமே பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.


Leave a Reply