துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொற்று பரவாமல் இருக்க இரவு பகலாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ஈரோட்டில் பாதபூஜை செய்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த காளியம்மாள் கலை பண்பாட்டுத் துறையில் மண்டல அதிகாரியாக உள்ளார்.

 

இந்நிலையில் கொரொனா பரவலை தடுப்பதில் முக்கிய பங்காற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை அழைத்து மஞ்சள், வேப்பிலை கலந்த நீரால் கால்களை கழுவி மாலையணிவித்து விருந்து படைத்துள்ளார்.

கொரொனா தடுப்பு நடவடிக்கை குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், துரிதப்படுத்தவும் அதிகாரிகள் அடங்கிய 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய்தடுப்பு அத்தியாவசிய பொருட்களின் சீரான விநியோகம் முதியோர்கள் நலன் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் இந்த சிறப்பு குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.


Leave a Reply