ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த உத்தரவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கியதில் மாணவர்களுக்கு பாட ரீதியிலான சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு தேவையான குறிப்புகளை அனுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply