அன்பில் மகேஷ் வழக்கு : ஐகோர்ட் கேள்வி
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதாவது, கடந்த தி.மு.க ஆட்சியின்போது, சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி ஒப்புதல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடாக வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கைக் செல்லாது என அறிவித்து ரத்து செய்யக் கோரி, அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், காவல்துறை மற்றும் அன்பில் மகேஷ் என இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இந்த வழக்கில் காவல்துறை தரப்பு பதிலளிக்க திங்கள் கிழமை (அக்.12) வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால் ரத்து செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பு வாதிட்டது. அதற்கு நீதிபதி லட்சுமி நாராயணன், தி.மு.க-வை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்பது ஆட்டின் தாடி போன்றது தானே..?தி.மு.க-வை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாதது தானே..? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





