--- --:--:-- --

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் விசிகதான் தூண் -அமைச்சர் ராஜ்மோகன்

3

விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் தவெக – விசிக கூட்டணி, கொள்கைக் கூட்டணி எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குள் பாமக வரவுள்ளதாகவும் தவெக அமைச்சரவையில் அக்கட்சி இடம்பெறவுள்ளதாகவும் கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், அதற்கு பாமக தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே விசிக நிகழ்ச்சியொன்றில் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் பாமக உள்ள அணியில் விசிக இடம்பெறாது என மீண்டும் உறுதி தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் விசிக ஒரு தூண் போலச் செயல்படுவதாகவும் தவெக- விசிக கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

 

 

“பல கருத்துக்களை சொல்லலாம், ஆனால் உண்மை என்ன என்பது நமக்கு தெரியும். தொல்.திருமாவளவன் எங்களுக்கு தாய் சிறுத்தை. திருமாவளவன், முதலமைச்சர் விஜய் சேர்ந்திருப்பது கொள்கை கூட்டணி. கூட்டணி பலமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “முதலமைச்சர் சார்பில் கேக் வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் மீது எப்போதும் தனி பாசம் உள்ளது.

 

 

அந்த அன்பிற்கு விலையே இல்லை. குழந்தைகள் காட்டக்கூடிய அந்த அன்பிற்கு ஆன பிரதிபலன் தான் குட்டீஸ்க்கு குட்டி கேக். ஒவ்வொரு குழந்தையும் கொண்டாட வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அத்தனை குழந்தைகளையும் கொண்டாடுவதற்காகத்தான் கேக்கை பரிசாக கொடுத்துள்ளார். மெட்ரோ திட்ட பணிகள் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு என்கிறார்கள், அதற்கான நிதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தா கொண்டு வரப்பட்டது? அல்லது செனடாப் ரோடு, கோபாலபுரத்தில் இருந்து நிதி வந்ததா? மக்கள் வரிப்பணத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் நாங்கள் தொடங்கியது என கூறுகிறார்கள், அப்படி எனில் நடக்கும் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் சீரழிவுக்கு யார் காரணம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

 

மேலும் மக்கள் நல பணிகள் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. இது தொடக்கம் மட்டுமே, இன்னும் மக்கள் பயன்படக்கூடிய திட்டங்கள் வெகு விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும், என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon