--- --:--:-- --

தெலுங்கிற்கு எதிரான கட்சியாக மாற்றிவிட்டார்கள்: திருமாவளவன்

6

திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் 100 விழுக்காடு சாதி வெறியர்கள் என்று கூறியுள்ளார். அதாவது, “நாம் தமிழர் கட்சியிலே ஒரு நபர், நண்பன் சீமான் இல்லை. அவர் எப்போதுமே நாகரிகமாக தான் பேசுகிறார். அவருக்கு கீழே ஒருவன் கூட ஞானமுள்ளவர்கள் இல்லை. சாதியவாதிகளும், மதவாதிகளும் தான் இருக்கிறார்கள்.

 

 

அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள் இல்லை. அவருக்கு கெட்டப்பேயரை அந்த கும்பலால் தான். 100 விழுக்காடு சாதி வெறியர்களும், மத வெறியர்களும் நாம் தமிழர் கட்சியை ஆக்கிரமித்து கொண்டு அதை தெலுங்கிற்கு எதிரான கட்சியாக மாற்றிவிட்டார்கள். தெலுங்கு எதிர்ப்பு தான் தமிழ் தேசியம் என்று திரிபுவாதம் செய்கிறார்கள். உண்மையிலேயே ஒரு மாநில உரிமையை மொழி உரிமையை மீட்பதற்கு தடையாக இருப்பவர்கள் யார்? பொன் பரப்பி தமிழரசன் பெயரை பா.ம.க-வினர் கூட பேசமாட்டார்கள்.

 

 

அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு போராளி, சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர். திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த போது என் வீடு தேடி வந்து சந்தித்து என்னை ஊக்கப்படுத்திய ஒரு போராளி தமிழரசன். அவருக்கு அடைக்கலம் தந்ததே ஆதிதிராவிட மக்கள் தான். காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்று ஒரு வன்னியர் வீட்டில் கூட தங்கமாட்டார். அதிலும் மாட்டுக்கறி சமைத்து தர சொல்லி தான் சாப்பிடுவார்” என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon