--- --:--:-- --

மரங்களை வெட்ட வேண்டிய அவசியமில்லை!

5

ராமநாதபுரம் மாவட்டமானது வறட்சி மாவட்டமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை சேமிக்கப்படும் மழை நீரானது கோடை வெயிலுக்குள் நீரின்றி வற்றி வறட்சியாக மாறிவிடுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, கால்நடை குடிநீர் இன்றி பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றி, வறட்சியை போக்குவதற்கு அரசு சார்பில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சூழலில் மரங்கள் வெட்டினால் அதனை மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்து பாதுகாக்கும் வகையில் இலவசமாக இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

இதில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நிறுவனம் வளாகங்கள் உள்ள மரங்களை வெட்டுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய 86087 76756 மற்றும் 79042 71774 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு இச்சேவை பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் தங்களுடைய பங்கேற்பினை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon