--- --:--:-- --

விமர்சனங்களை முடக்குகிறார்களா? – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கனிமொழி கடிதம்

13

தமிழகத்தில் த.வெ.க அரசை விமர்சித்து பதிவிடப்படும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்படுவதாகவும், அவற்றின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும் தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அரசு அதிகார அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தவும், மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

மேலும், அரசியல் சார்பற்ற முறையில் வெளிப்படைத்தன்மையுடனும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யக் கோரி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon