ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்! கொரொனாவுக்கு காரணம் இது தான்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகையே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள கண்ணுக்குத் தெரியாத கொரொனா வைரஸானது வவ்வால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 போன்ற கொரொனா வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் ஜீனோட்டிக் எனப்படும். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் கூடியவை. இதற்குமுன் பரவிய சார்ஸ் வைரஸ் பூனைகளில் இருந்தும் மெர்ஸ் வைரஸ் ஒட்டகங்களில் இருந்தும் மனிதர்களுக்கு பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

ஆனால் சீனாவின் உகான் நகரில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இது வௌவால்களிலிருந்து பரவியிருக்கலாம் என்று ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

 

பெரும்பாலான வைரஸ் மனிதர்களை தாக்குவதற்கு முன் மற்றொரு உயிரினங்களுக்கு பரவி தன்னை மனிதர்களின் உடலை தாக்குவதற்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்கின்றன. சார்ஸ் வைரஸை பொறுத்தவரை முதலில் வவ்வால்களை பாதித்தது. பின்னர் பூனை இனத்திற்கு பரவி இறுதியாக தான் மனிதர்களை தாக்கியது.

 

இதேபோல மெர்ஸ் வைரஸ் வௌவால்களிடமிருந்து ஒட்டகங்களுக்கு பரவி பின்னர் மனிதர்களை பாதித்தது. உலகையே அதிரவைத்த இத்துணை வைரஸ்களின் பிறப்பிடமும் வவ்வால்கள் தான். 2002 ஆம் ஆண்டு சுமார் 800 உயிர்களை கொன்ற சார்ஸ் வைரஸ் ஆனது வவ்வால்களின் மூலம் பரவியது 2017ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது.

உகான் மாகாணத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்த வௌவால்கள் மூலமாகவே சார்ஸ் வைரஸ் பரவியதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வௌவால்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஏராளமான வைரஸை பரப்பும் திறனை பெற்றவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ஏனெனில் வைரஸ்களை சுமக்கும் அளவிற்கும், எதிர்க்கும் அளவிற்கும் வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் வௌவாலிடம் உள்ளன. வௌவால்கள் பறக்க தேவைப்படும் ஆற்றலை அதன் உடலில் உள்ள செல்களை உடைத்து டி‌என்‌ஏகளை சிறுசிறு துகள்களாக வெளியிடுகின்றன. துகள்களில் இருந்து வரும் கிருமி வேறு உயிரினத்திற்கு செல்லும் திறனை பெற்றுள்ளது.

 

இப்படி ஆகவே வௌவால்களிடமிருந்து பல வைரஸ்கள் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வைரஸ்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் வௌவால் இனங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவும் முடியாது அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மாறாக வௌவால்களில் இருந்து உருவாகும் வைரஸை எதிர்க்கும் மருந்தை உருவாக்குவதே மனித குலத்திற்கான சவால் எனக்கூறலாம்.


Leave a Reply