விலை குறைவான வென்டிலேட்டர் வடிவமைத்த மருத்துவர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொற்று பரவிவரும் நிலையில் அதன் தீவிர கட்டத்தை எட்டும் நோயாளிகளுக்கு உதவியாக போர்ட்டபிள் வென்டிலேட்டரை தீப்லி அகர்வால் என்ற நரம்பியல் நிபுணர் ஒருவரும், ரோபட் விஞ்ஞானியான திவாகர் என்பவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

 

எந்த இடத்திற்கும் கொண்டு சென்று பயன்படுத்தும் வகையில் இந்த வெண்டிலேட்டர் மிகவும் சிறிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான வெண்டிலேட்டர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை விடையுடன் நிலையில் இந்த புதுமையான வென்டிலேட்டர் ஒன்றரை லட்சம் ரூபாய் என்ற விலைக்கு கிடைக்கிறது.

 

ஆக்வா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்றரை கிலோ எடையுள்ள வென்டிலேட்டர் நாட்டின் கொரொனா சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மாதம் 20,000 வென்டிலேட்டர்கள் வரை தயாரிக்க முடியும் என அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .

 

அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வேண்டிலேட்டர் உற்பத்திக்கு உதவ உள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.


Leave a Reply