--- --:--:-- --

திருப்பூரில், போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர் கஷாயம் வழங்கிய சமூக ஆர்வலர் இந்திராசுந்தரம்

1

திருப்பூர் மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான இந்திராசுந்தரம் (எவரெஸ்ட் ரோட்டரி சங்கம் ) தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தேவாங்கபுரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் 30 பேர்கள், வஞ்சிபாளையம் சேவா சமிதியில் தங்கியிருக்கும் 73 பேர்கள் என 103 பேருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பாய்கள், லுங்கிகள், சட்டைகள், குளியல் சோப்புகள், பேஸ்ட், பிரஸ் உள்பட அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை இலவசமாக வழங்கினார்.

அதேபோல் நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 25 பேருக்கு துண்டு, பிரஸ், குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்புகளை வழங்கினார். இன்று சமூக ஆர்வலர் இந்திராசுந்தரம் மற்றும் மூலிகை சூப் நிபுணர் அழகுராஜ் ஆகியோர் சித்தவைத்தியம் பரிந்துரைத்த கபசுரக் குடிநீர் கஷாயம் தயாரித்து திருப்பூர் மாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீஸ்கார்கள் மற்றும் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருக்கும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நேரடியாக சென்று கபசுரக் குடிநீர் கஷாயத்தை வழங்கினர்.மேலும்,தேவைப்பட்டோருக்கு முகக்கவசமும் வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon