கோவை போத்தனூர் அருகே பாதாள சாக்கடைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்பில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பைப்புகள் தீயில் கருகி நாசம் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை போத்தனூர் அடுத்த அண்ணாபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் பதிப்பதற்காக பிளாஸ்டிக் பைப்புகளை எல் அன் டி நிறுவனம் சார்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த இடத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகத்தினால் தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைப்பால் கொழுந்து விட்டு எரிந்தது.

 

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் பைப்புகளை தனியாக பிரிந்தெடுத்தனர். தகவல் அறிந்த கோவை மாவட்ட தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை ஒருமணி நேரமாக போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பைப்புகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply