திருமண நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடு! 30 பேர் மட்டுமே அனுமதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மார்ச் 16 ஆம் தேதிக்கு முந்தைய நாட்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே மண்டபங்களில் தங்களது திருமண விழாவை நடத்தலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக அவ்வாறு திருமண மண்டபங்களில் பதிவு செய்திருந்தாலும் இரு தரப்பில் இருந்தும் தலா 15 பேர் வீதம் 30 பேர் மட்டுமே திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

மார்ச் 16ஆம் தேதிக்கு பிறகு திருமண மண்டபங்கள் பதிவு செய்தவர்களுக்கு பதிவு கட்டணத்தை திருப்பித் தருமாறும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதியதாக திருமண விழாக்களை பதிவு செய்யக்கூடாது என்றும் மண்டப உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மேற்கண்டவை தொடர்பான ஐயங்கள் இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply