தமிழகம் முழுவதும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை முல் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 எட்டியுள்ளது . பலி எண்ணிக்கையும் 2 – ஆக உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

 

தமிழகத்தில் கொரானா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கும், கேரள எல்லையோரம் உள்ள 7 மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால் நேற்று இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததால் குழப்பம் நிலவியது. இதையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது உறுதிதான் என்றும், இது தொடர்பான முறையான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகளுக்கும், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply