வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்
சுவாசம் தொடர்பான கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்துச் சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும், உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




