5 ஆயிரம் முகக்கவசங்கள் தலா ரூ.2க்கு விற்பனை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கேரள மாநிலத்தில் ஒரு மருந்து கடை ஓனர் ஐந்தாயிரம் முக கவசங்களை தலா 2 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கொச்சியில் உள்ள மருந்தகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு முக கவசத்தை 2 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக அதன் உரிமையாளர் கூறினார்.

 

தற்போது ஒரு கவசத்தை எட்டு முதல் பத்து ரூபாய் வரை கொள்முதல் செய்வதாகவும், ஆனாலும் அதனை இரண்டு ரூபாய்க்கு விற்பதாகவும் அவர்கள் கூறினர். இதன்மூலம் சாதாரண மக்கள், மருத்துவமனை பணியாளர்கள், சிகிச்சை பெறுவோர் பெரிதும் பயன் அடைவதாக குறிப்பிட்டனர்.

 

கேரளாவில் முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மற்றும் மருந்தகங்கள் ஒரு முக கவசம் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.


Leave a Reply