“வெளி மாநிலங்களுக்கு செல்லாதீர்கள்!!” முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தல்!! எல்லையோர பகுதிகளில் தியேட்டர்கள், மால்களை மூடவும் உத்தரவு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அண்டை மாநிலங்களின் எல்லையோர வட்டங்களில் தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

கொரானா பாதிப்பை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று Uல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.தமிழகத்த்தின் அண்டையோர மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் எல்லையோரம் அமைந்துள்ள வட்டங்களில் அனைத்து தியேட்டர்களையும், வணிக வளாகங்களையும் மூட வேண்டும். மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் கொரானா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில வருவாய் நிர்வாக ஆணையர் தினமும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

 

தமிழகத்தில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.