மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு மனு தள்ளுபடி
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் அரசியல் சார்பற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், அறங்காவலர் குழு நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆன்மீகத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது” என்ற முக்கியக் கருத்தையும் இந்த விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்துள்ளது. தற்போதுள்ள அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக ஆளும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களே பதவி வகித்து வருவதாகவும், எனவே அறங்காவலர் குழு நியமனங்களில் அரசியல் தலையீடு முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




