--- --:--:-- --

மம்தா தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு..!

9

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும், மம்தா தரப்பு கட்சிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற புதிய பெயரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

 

 

மம்தா தரப்பும், மற்றொரு பிரிவினரான ரிதப்ரதா தரப்பும் கட்சிக்கு உரிமை கோரிய நிலையில், இரு அணிகளின் மனுக்களையும் விசாரித்த தேர்தல் ஆணையம், மூல கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெயர் மற்றும் அதன் ‘இரட்டைப் பூக்கள்’ சின்னத்தை முடக்கியுள்ளது.

 

 

அதேவேளையில், அரூப் ராய் மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், இந்த ரிதப்ரதா பிரிவு திரிணமூல் காங்கிரஸுக்கு ‘அஞ்சல் உறை’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon