கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் அருகே கனியமூர் கைகாட்டி என்ற இடத்தில் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று பேரிகார்டு மீது மோதி தடுப்பு சுவர் மேல் ஏறி அங்கிருந்த கண்காணிப்பு கேமரா கம்பத்தை இடித்து தள்ளியது.
பொதுமக்கள், போலீசார் இணைந்து அமைத்த 2 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமராக்கள் இதில் சேதமடைந்த நிலையில் லாரி ஓட்டுநரை சிறைபிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சேதமடைந்த கேமராவை சீர் செய்வதற்காக நரேஸிடம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!