--- --:--:-- --

ஒருதலை காதல்: பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைத்த இளைஞர் கைது

11

நெய்வேலி பகுதியை சேர்ந்த சலோமி என்ற பெண் வடலூரில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பணி புரிந்த நிலையில் தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் பேருந்தில் வேலைக்கு வரும் சமயத்தில் தனியார் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவருடன் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அதனை தவறாக புரிந்துகொண்ட சுந்தரமூர்த்தி சலோமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சலோமி சுந்தரமூர்த்தி உடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி இன்று சாலை வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

 

இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெண் மீது தீ வைத்த சுந்தரமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon