--- --:--:-- --

இளம்பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை

13.1

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே இளம் பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். திருக்கனாங்கோட்டையை சேர்ந்த இளம் பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த அனீஸ் என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகிய தனது சகோதரியை தேடி அந்தப் பெண் நாகர்கோவில் முழுவதும் அனிசுடன் சென்று தேடியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அனிஷ் ஜூஸ் வாங்கிக் கொடுத்ததாகவும், அதனை குடித்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் மயங்கியதாகவும், கண்விழித்து பார்த்தபோது கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளம்பெண் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்பெண்ணின் உறவினர்கள் போலீசில் கொடுத்த புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon