சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு…! பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸார் நூதன ஆர்ப்பாட்டம் !!!
சமையல் கேஸ் விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக ஏழை, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து,கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமையல் கேஸ் சிலிண்டரை பாடையில் எடுத்து வந்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் திடீரென சமையல் கேஸ் சிலிண்டரின் விலையேற்றிய மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அமைப்பினர் உட்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர். சமையல் கேஸ் விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசை கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




