ராமநாதபுரம் வருவாய் கோட்ட அளவிலான தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியருக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டிகள் ‘கடல் வளம் காப்போம்’ என்ற தலைப்பில் இன்று காலை இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் வி.அப்துல் காதர் ஜெயிலானி போட்டிகளைத் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் ராஜா தினகர் ஆர் .சி. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரர். சி.எம்.பெலிக்ஸ் பீட்டர் சின்னசாமி தலைமையேற்று கடல் வளம் காப்போம் என்பது குறித்து பேசினார். முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சோமசுந்தரம் , முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ். நந்தகோபால் முன்னிலை ஆகியோர் வகித்தனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தேசிய பசுமைப்படையின் இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட் வரவேற்றார். போட்டிகளை தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா. தீனதயாளன் வழி நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ ,மாணவியர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் அந்தோணிதாஸ், சத்தியமூர்த்தி, மணிமொழி, ஜீவா, தக்கலை பீர் முகமது, நாராயணன், ஆசிரியைகள் தமிழரசி, கீர்த்தனா, மேகலாதேவி, ஆறுமுகவள்ளி ஆகியோர் போட்டி நடுவர்களாக பணியாற்றினர்.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்கள், கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பிப்.21 ல் நடைபெறும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி ரொக்கப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட் செய்திருந்தார்.