உலகிலேயே கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருந்து வருகிறது. மாறி வரும் உணவுப் பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவை புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை மக்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 2020 எனும் பிங்க் மாரத்தான் போட்டி இன்று கோவை நேரு விளையாட்டு மைதானம் முன்பு நடைபெற்றது.
10 கிலோ மீட்டர்,5 கிலோ மீட்டர்,3 கிலோ மீட்டர்,2 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.