--- --:--:-- --

ஆவின் லாரி உரிமையாளர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

2

ஆவின் லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், சென்னையில் ஆவின் பால் விற்பனை வழக்கம்போலவே நடைபெறுகிறது.

 

ஆவின் லாரி உரிமையாளர்கள் அரசுக்கு இடையேயான வாடகை ஒப்பந்தம் காலாவதியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதால் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வலியுறுத்தி ஆவின் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் முப்பத்தி ஒரு லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் செய்யப்படும் நிலையில், 315 லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கிடையே பால் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வழக்கம்போல் சென்னைக்கு பால் வரத்து உள்ளதால் தட்டுப்பாடின்றி ஆவின் பால் விநியோகம் நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon