ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக்! பரபரப்பு புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக்டாக் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட செல்வி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செல்வியின் இருக்கையில் அமர்ந்து அவரது கணவர் ரமேஷ் டிக் டாக் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஊராட்சிமன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அங்கிருந்த ஆவணங்கள், பாஸ்புக், இருப்பு தொகை உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தவும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply