பேருந்து கண்ணாடிகளை உடைத்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்
சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கடந்த நான்காம் தேதி சென்ட்ரல் மேம்பாலம் அருகே மாநகரப் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர்.
அவர்களில் பூபதி, சுரேஷ்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்களை கைது செய்த போலீசார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30 மாணவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




