கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து இருந்தால் அரசை அணுகலாம்
கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் வேளையில் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 1,351 பேர் 11 மருத்துவமனைகளில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான கொரோனா வைரஸ் குறித்த விளக்கக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பீலா ராஜேஷ் சந்தேகப்படும் வகையில் இருந்த 34 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். நிலவேம்பு கஷாயத்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




